முல்லேரியாவில் நிகழ்ந்த மர்ம கொலையின் பிரதான சந்தேகநபர் கைது
அண்மையில் முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கை கால்கள் இல்லாத நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
இந்த கோர சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரும் அவரிற்கு உதவியாக இருந்த இன்னொருவருமென இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகரான குறித்த சந்தேக நபர் தனது சட்டத்தரணிகளுடன் சப்புகஸ்கந்த காவல்நிலையத்தில் தானே வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல் பாகங்களை வெட்டுவதற்கு
சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இவர் சியம்பலாப்பே தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவராவார்.
பின்னர் பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக இன்னொருவரும் காவல்துறையினரிடம் வந்து சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சரணடைந்த இரண்டாவது சந்தேக நபர் 48 வயதுடையவர் எனவும் அவர் ஒரு பூசாரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாவது சந்தேகநபர் கொன்ற பெண்ணின் உடல் பாகங்களை வெட்டுவதற்கு பிரதான சந்தேக நபருக்கு உதவியவர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர்கள் காவல்துறையினரிடம் சரணடையும் போது, பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரும் காவல்துறையினரிடம் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் தடுப்பில் வைத்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வருவதாக கூறப்படுகிறது.
