முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கிளிநொச்சியில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள்
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்றையதினம்(18) வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கிளிநொச்சியில் வீதிகள் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
ஆத்ம சாந்தி பிரார்த்தனை
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |