மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Sri Lankan Tamils Tamils Mannar Mullivaikal Remembrance Day
By Shadhu Shanker May 18, 2024 05:11 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மன்னாரில் இன்றைய தினம் சனிக்கிழமை(18) காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் இடம்பெற்றது.

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்: அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் நாயகம்

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்: அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் நாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடரை அருட்தந்தை நவரட்னம் அடிகளார் ஏற்றி மாலை அணிவித்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemoration In Mannar

அதனைத் தொடர்ந்து மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது.குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை யொட்டி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

மனித உரிமை மீறல்

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழின படுகொலையின் பதினைந்து ஆண்டுகள் ஆகியும் எதுவுமே மாறவில்லை. இனப்படுகொலை நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிய போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemoration In Mannar

பல்வேறு விதமான ஆணைக் குழுக்கள் அனைத்தும் பயனற்று போனது.தமிழ் அரசியல்வாதிகளும் ஒழுங்கு முறையான திட்டமிட்ட தொடர் நடவடிக்கை எதையும் இனப்படுகொலை விவகாரத்தை முன்னோக்கி நகர்த்தவில்லை.

அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்கு முறையும் தனிமனித பேச்சு சுதந்திர அடக்கு முறையும் பயங்கரவாத விசாரணைகளும் அச்சுறுத்தல்களும் சிவில் செயற்பாட்டில் ராணுவ தலையிடும், பௌத்த ஆக்கிரமிப்பும் ஏகாதிபத்தியமும் அரசியல் வேற்றுமைகளும் மாற்றுக் கருத்துக்களை முடக்கு வதும் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதும் என தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர்

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் எந்த மாற்றத்தையும், ஏற்றத்தையும், ஏற்படுத்தவில்லை. மாறாக தொடர்ந்து வலியையே ஏற்படுத்தி வருகிறது.

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemoration In Mannar

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. ஐ .நா மனித உரிமைகள் ஆணையகம் அர்த்தம் இல்லாத நடைமுறைச் சாத்திய மற்ற தீர்மானங்களை காலத்துக்கு காலம் எடுத்ததே தவிர அதனால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எந்த மாறுதலும் நிகழவில்லை வெறும் காகிதங்களுடன் முடங்கிப் போனது.

மனித உரிமை ஆர்வலர்கள் என உலகின் பல பாகங்களிலும் இருந்து இங்கு வந்து எம்மை வேடிக்கை பார்த்தனரே தவிர நீதியை நிலைநாட்ட வில்லை.

இனப்படுகொலை

உலகின் எல்லா கனவான்கள் என வேடம் தரித்தவர்கள் சேர்ந்தே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றினார்கள்.

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemoration In Mannar

அவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.இந்த உலகம் வலி யோனுக்கு நீதியையும் அறத்தையும் நியம நியதிகளுக்குள் ஒருபோதும் நிலை நாட்டியதாக எங்கும் வரலாறு இல்லை எல்லாம் நலன் சார்ந்த நிகழ் தகவுகளே.

அநீதியை விதைத்தவனிடம் நீதியின் நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியுமா? இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேசமும் எம்மை தொடர்ந்து ஏமாற்றுகிறது ஏமாற்றியது இனப்படுகொலையின் பங்கு தாரராகியது.

முள்ளிவாய்க்காலில் மரணித்த ஆன்மாக்கள் 

நீதி போதிக்கும் சம தர்மம் மனித உரிமை வாழ்வியல் உரிமை என உச்சரிக்கும் அநீதிக்கு துணை போகும் நீதி இல்லா நாதியற்ற போலி கனவான்களே இனியாவது உங்கள் ஏமாற்று வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள்.இந்த உலகம் இனியும் உங்களை நம்ப தயார் இல்லை. 15 ஆண்டுகளில் உங்கள் ஏமாற்று வித்தைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்புகள் நன்கு உணர்ந்து விட்டன.

மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Commemoration In Mannar

ஆகவே எமக்குள் நாம் பேதங்களை கடந்து இனத்துவ ,மொழித்துவ, வாழ்வியல் ,சுயநிர்ணய உரித்துக்களை பெற ஒருமித்து ஒருங்கிணைவதே ஒரே வழி. அது தான் எமக்கான நீதியை நாமே பெற்றுக் கொள்வதற்கான வழியும் கூட. 15 ஆண்டுகள் வெறுமையாக பயனின்றி கடந்து விட்டது என்பதே கசப்பான உண்மை.

இதற்கு வல்லான்மை அற்ற தமிழ் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே தமிழர் ஒரே தேசமாக திரள்வோம். அதுவே நமக்கான இன்றைய தேவை. இல்லையேல் முள்ளிவாய்க்காலில் மரணித்த ஆன்மாக்கள் நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

அது நிகழாத வரை சிங்கள தேசம் நம்மை பிரித்தாளும் வேலையே தொடர்ந்து செய்யும். ஆகவே விழித்துக் கொள்ள வேண்டியது நாம் தான்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024