கஞ்சி குடித்த காவல்துறையினருக்கும் விசாரணையாம்..!
முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த காவல்துறையினர் இருவருக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதியன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இதன்போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு வீதி போக்குவரத்து காவல்துறையினரும் பல்கலைகழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று குடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த காவல்துறையினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளதுடன் அவை சிங்கள ஊடகங்களிலும் வைரலாகின.
இந்த நிலையில், குறித்த இரு காவல்துறையினர் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 19 மணி நேரம் முன்
