திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
திருகோணமலையில் ( Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சியானது சிவன் கோயிலடிக்கு முன்னால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தலைமையில் இன்று (16) மாலை கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் மூதூர் காவல்துறையினரால் சம்பூரில் கஞ்சி வழங்கப்பட்ட போது நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தடை உத்தரவு
இன்றைய தினம் (16) இது தொடர்பில் தடையை அகற்றக் கோரிய சமர்ப்பணத்தை முன்வைத்து சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் நீதிமன்றில் வாதிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றினால் தடை உத்தரவு அகற்றப்பட்டதை அடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
முள்ளிவாய்க்கால் கஞ்சியை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் உள்ள வீதியில் உள்ள பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அருந்தினர்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |