புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சிகண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் (படங்கள்)
தமிழர் தாயகத்தை போலவே புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் இடம்பெற்றிருந்தன.
உலகின் நேரமாற்றத்தின்படி முதலில் பசுபிக் பிராந்திய நாடுகளிலும் அதனையடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் அதற்குப்பின்னர் வடஅமெரிக்க நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
அவுஸ்திரேலியா
இதற்கமைய, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸ்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர் இனவழிப்பு நாள் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றுள்ளன.
தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் [காணொளிகள்] |
பிரான்ஸ்
பிரான்சில் பரிஸின் புநகரப்பகுதியான கிளிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
நகர முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். எனினும் பிரான்ஸின் பிரதான அஞ்சலி நிகழ்வு நீதிப்பேரணியுடன் இடம்பெற்றுள்ளன.
சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது - முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து நேரலை |
பிரித்தானியா
ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பிரித்தானியாவில் இன்று பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரசியல் கட்சி பிரபலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
லண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இன்று பிற்பகலில் பேரணியுடன் கூடிய ஒன்றுகூடலை நடத்தியிருந்தன.
இதேபோல பிரித்தானிய தமிழர்பேரவை ட்ரபல்கார் சதுக்கத்தில் இன்று மாலை தனது அமைப்பு சார்பான நிகழ்வை நடத்தியிருந்தது.
ஒக்ஸ்போர்ட் பகுதியிலுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்திலும் இன்று மாலையில் வெளியரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.
இதேவேளை பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக முன்றலிலும் தமிழர்களுக்காக சுதந்திர வேட்கை அமைப்பினர் ஒரு நீதிகோரும் ஒன்றுகூடலை நடத்தியிருந்தனர்.
கனடா
கனடாவிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, கனடா மற்றும் அமெரிக்காவில் சுதந்திர தமிழர் தாயகத்துக்கான பொதுவாக்கெடுப்புக்கான கால்கோள் நிகழ்வும் முதல் நாள் வாக்கெடுப்பும் இடம்பெற்றிருந்தது.
ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட்ட நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சுவிஸ்
எனினும் சுவிஸில் நேற்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
