டென்மார்க்கில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
டென்மார்க்கில் (Denmark) உள்ள மத வழிபாட்டு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
டென்மார்க் நாஸ்ட்வேட்(Naestved) நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று முன்தினம் (11.05.2024) முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழின அழிப்பின் மூலம், தங்கள் இன்னுயிர்களை ஈர்ந்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு நினைவேந்தல் வழிபாடு பொதுமக்களால் உணர்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பொதுமக்கள் தங்கள் கைகளில் நெய் விளக்கேந்தி நெஞ்சினில் மரணித்தவர்களின் நினைவை உணர்வுடன் சுமந்து தரிசித்தனர்.
டென்மார்க் க்ரிண்ட்ஸ்டெட் (Grindsted) நகர தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று (12.05.2024) டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.