முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள்...! நள்ளிரவில் காவல்துறையின் அராஜகம்: பெண்கள் மூவர் கைது
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (12.5.2024) நள்ளிரவு திருகோணமலை (Trincomalee) - சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, காளிராஜா சுஜா ஆகிய மூன்று பெண்களே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரவு வேளையில் துப்பாக்கிகளுடன் குறித்த வீட்டுக்குச் சென்ற ஆண் காவல்துறையினர் குறித்த பெண்களை அநாகரிகமான முறையில் இழுத்து சென்றுள்ளனர்.
சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூவரையும் சம்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் சம்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினர் கைது
இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முண்னனியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரகுமாரும் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு காவல்துறையினர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |