இலங்கையில் தமிழர்களுக்கு துக்க தினத்தை அனுஷ்டிக்க கூட உரிமை இல்லை...!
இலங்கையில் (Sri Lanka) தமிழர்களுக்கு துக்க தினத்தை அனுஷ்டிக்கும் உரிமை கூட இல்லை என மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் (Rajkumar Rajeevkanth) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலை (Trincomalee) சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்த பெண்களை நள்ளிரவில் வீடு புகுந்து காவல்துறையினர் மிக மோசமாக கைது செய்ததையும் அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு மற்றும் கிழக்கில் வழமையாக இடம்பெறும் விடயம் தான். இதனை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது.
இந்த நிலையில், திருகோணமலை சம்பூரில் தாமாக முன்வந்து மூன்று பெண்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தரப்பினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல்.
நினைவுகூரலின் போது உணவு வழங்குவது பானங்களை வழங்குவது அடிப்படை உரிமையாகும். முள்ளிவாய்க்கால் வாரத்தில் நினைவுரல் நிகழ்வுகள் நாடு முழுவதிலும் சுமூகமான முறையில் இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்” என கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |