தாயகத்தில் இன அழிப்பிற்கான புதிய ஆதாரங்கள் - மே-18 பகிரங்கப்படுத்தவுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை!

Tamils Sri Lanka Sri Lanka Final War Tamil diaspora Sonnalum Kuttram
By Kalaimathy May 13, 2023 01:20 PM GMT
Report

தமிழர் தாயகப் பகுதி தொடர்ச்சியாக கபளீகரம் செய்யப்படுவது தொடர்பில் புதிய ஆதாரங்களை தாம் சேகரித்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் வி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, இனப்படுகொலை ஆவணப்படுத்தல் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழர் தாயகப் பகுதியில் புதிய பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டு தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதேவேளை வடக்கு கிழக்கில் தமிழர் பூர்வீகம் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் பெருமளவு முனைப்புடன் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

இது தொடர்பில் 2015 மற்றும் 2016 காலப் பகுதியில், தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தல் புத்தகம் ஒன்றை தயார்ப்படுத்தி, பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

இன அழிப்பு தொடர்பான புதிய ஆதாரங்கள்

தாயகத்தில் இன அழிப்பிற்கான புதிய ஆதாரங்கள் - மே-18 பகிரங்கப்படுத்தவுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை! | Mullivaikkal May 18 Genocide Day Uk Btf Buddhism

இதன் போது இது வரை வெளிவராத பல புதிய ஆதாரங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை  சேகரித்துள்ளது. அந்த வகையில், வடக்கு கிழக்கு, தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த பூர்வீக பிரதேசங்களே எனவும் இங்கே பெரும்பான்மையாக தமிழரே வாழ்ந்தார்கள் என்பதற்கான புதிய ஆதாரங்கள் பலவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறு தம்மால் சேகரிக்கப்பட்டுள்ள முக்கிய ஆணவங்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் மே-18 இன அழிப்பு நாளில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களை வெளியிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழரின் இருப்பை உலக நாடுகளும் மறுக்க முடியாதபடியான ஒரு நிலையே ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு அல்ல என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை செயற்பாடுகளின் இணைப்பாளர் சண் றதீஸ் (சுதா) தெரிவித்துள்ளார்.

அதேவேளை இனப்படுகொலையாளிகளை சர்வதேச கூண்டில் ஏற்றுவதே பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையில் 1948 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கான ஆதாரங்களுடன் 2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், பிரித்தானிய தமிழர் பேரவை, சிறிலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை தமிழ் இன அழிப்பு நாளான மே-18 அன்று பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் இளைஞர் யுவதிகளால், இனப்படுகொலையை எடுத்துகாட்டும் வகையிலான நிகழ்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுன்றி, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்