வவுனியாவை அடைந்த தமிழினப் படுகொலை நினைவுத்தூபி
Sri Lanka Army
Sri Lankan Tamils
Vavuniya
By Independent Writer
வவுனியா முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஆரம்பமான குறித்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை வந்தடைந்தது.
உணர்வெழுச்சியுடன் வரவேற்ற மக்கள்
வவுனியாவில் நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நகரவீதியூடாக தினச்சந்தையை அடைந்தது.
குறித்த ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி