முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்தோர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு!
arrest
police
court
batticalo
mullivaikkal
By Kalaimathy
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கல்குடா காவல்துறையால் கடந்த மே18ம் ஆம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் இன்றைய தினம் சந்தேக நபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாத காரணத்தால் இணைய வழியூடாக aஎதிர்வரும் 25ம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.