வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
Vavuniya
Mullivaikal Remembrance Day
Black Day for Tamils of Sri Lanka
By Independent Writer
வவுனியா (Vavuniya) இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று இருந்தது.
அந்தணர் ஒன்றியத்தின் ஆலோசகர் ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
You may like this

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்