யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர்களால் முள்ளிவாய்க்கால் (Mullivaikkaal) கஞ்சி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (13.4.2024) யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சாட்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர், எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள்.
வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவை கடத்தும் வகையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |