மீண்டும் மும்பை இந்தியன்ஸ் படுதோல்வி
சண் றைசஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சண் றைசஸ் ஹைதரபாத் அணி
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சண் றைசஸ் ஹைதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 277 ஓட்டங்களை குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் தோல்வி
இதனையடுத்து 278 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை மட்டுமே பெற்றது .இதனால் அந்த அணி 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
மும்பை இந்தியன்ஸ் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |