மரண தண்டனை கிடைத்தும் மனம் மாறாத வித்யா கொலை குற்றவாளி...
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் 18 வயதான பள்ளி மாணவி சிவலோகநாதன் வித்யா கொடூரமாகப் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதன் தாக்கமும் ஆழமான வலியும் இன்றும் 11 ஆவது ஆண்டாக எம்மிடையே தொடர்கிறது.
இந்த வழக்கில் குறிப்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஒன்று கிடைத்திருந்தது.
2015-ஆம் ஆண்டு வித்தியா மீதான கூட்டுப் பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை வழக்கில் முக்கியப் பிரதிவாதி ஒருவர் தப்பிச் செல்ல உதவியதற்காக, சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பிரச்சாரகர் (SDIG) லலித் ஜயசிங்கவிற்கு வவுனிய மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
2025 பிப்ரவரி 20 அன்று, 'ஸ்விஸ் குமார்' என அறியப்படும் மகாலிங்கம் சசிகுமார் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உதவிய குற்றத்திற்காக ஜெயசிங்கவை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம். மிஹார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிபதி, ஜெயசிங்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
இவ்வாறான பின்னணியில்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும் மரணதண்டனை தீர்ப்புபெற்றவருமான கோகிலன் கண்ணா, கண்டி பல்லேகல சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அங்கும் அவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்த முனைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டனை அனுபவிக்கும் நிலையில் இருந்தும் இவர்களின் மனங்களில் மாற்றம் உருவாகமை விமர்சணத்துக்குள்ளாகி வரும் நிலையில் இதன் உள் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |