முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி
hospital
chennai
tamilnadu
muralitharan
By Jaso
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், இதயம் தொடர்பிலான சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை – கிரீம்ஸ் வீதியிலுள்ள அப்பலோ வைத்தியசாலையில் முத்தையா முரளிதரன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்திர சிகிச்சையொன்றுக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முத்தையா முரளிதரன் தற்போது ஐதராபாத் சன் ரைசஸ் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்