தமிழர்களை, விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்தும் ‘முரளிதரனின் 800’ திரைப்படம்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் ‘800’திரைப்படம் தமிழர்களை,விடுதலைபுலிகளின் தலைவரை இழிவுபடுத்துவதாகவே அமைந்துள்ளதாக எழுத்தாளர் ஜெயபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் காட்சிகளை நீக்கிவிட்டு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகளை நீக்கிவிட்டு அவர் கிரிக்கெட்டில் புரிந்த சாதனைகளை இடம்பெறச் செய்தால் அது சிறப்பானதாக இருக்கும்.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் சர்ச்சையை ஏற்படுத்துவது அரசியல் காட்சிகள்தான்.குறிப்பாக வெளிவந்த ‘ட்ரெய்லரில்’ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கேவலப்படுத்துவது மாதிரி ஒரு காட்சி வருகின்றது.
தோட்டக்காரன் என பேசும் அபத்தமான காட்சி
அடுத்தது மலையக தமிழ் மக்களை தோட்டக்காரன் என நாசர் பேசும் அபத்தமான காட்சி வருகிறது. அதேபோன்று இலங்கையில் இந்திய இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வு புரிந்தமை தொடர்பாக நகைச்சுவையான காட்சியும் இடம்பெற்றுள்ளது.
எனவே சிங்கள நண்பர்களை திருப்திப்படுத்துவதற்காக தமிழர்களையும் மலையக தமிழர்களையும் இழிவுபடுத்தும் இந்த காட்சிகள் நீக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.
அவரின் செவ்வி முழுமையாக காணொளியில்