கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் - இளைஞன் வெட்டிக் கொலை
Sri Lanka Police
By Pavan
கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு (24) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய காவல்துறையினர் ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை

இதன்போது வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோதலில் ஈடுபட்ட மற்றுமொரு (28) வயதுடைய இளைஞர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 10 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்