இவரை கண்டால் அறியத் தரவும்..! பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறை
பண்டாரவளையில் உள்ள விடுதி ஒன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்படி சந்தேகநபரின் புகைப்படத்தை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
பண்டாரவளை விடுதி அறையொன்றில் நேற்று (24.08.2023) மாலை பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையின் பின்னர், சந்தேகநபர் தப்பிச் சென்றதுடன், அவரது புகைப்படத்தை காவல்துறையினர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கம்

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் பண்டாரவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 8591523 / 071 8710108 / 071 8594033 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.