14 வயது சிறுமியை படுகொலை செய்தவரை தேடும் காவல்துறை (படம் இணைப்பு)
தம்புள்ளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட களுகங்கை எல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்கு தம்புள்ளை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
விக்கிரமசிங்க ஆராச்சில பிரதேசத்தைச் சேர்ந்த சுமேத வசந்த(Sumedha Wasantha) எனப்படும் பஹான் வயது 35 என்ற சந்தேகநபர் கொலையின் பின்னர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குருநாகல், மகுலகம, தொரட்டியகலவில் வசிக்கும் இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் 862495098 V என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். OIC - தம்புள்ளை - 071-8591091 OIC - குற்றப் பிரிவு - 071-8593103