தமிழரசு கட்சி வேட்பாளர் மீது கொலை வெறி தாக்குதல்!
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கருவேப்பங்கேணி வட்டாரக்கிளையின் தலைவர் தனுச பிரதீப் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு சுமார் 9.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது வீட்டிலிருந்து உணவுப்பொருட்கள் வேண்டுவதற்கு கடைக்குச் சென்று கொண்டிருந்த வேளை கூழாவடி சந்தியில் உள்ள டிஸ்கோ விளையாட்டு மைதானம் அருகே இனம் தெரியாத நபர்களால் தலையில் பலமாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை

இவருக்கு தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று காலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர், நடைபெற இருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட இருந்த தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 9 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்