ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர்

Tamils Rajiv Gandhi Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Mar 26, 2024 11:51 AM GMT
Report

இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 பேரில் மூவரான முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(26) தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும், 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தமிழ் படிக்க தெரியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

தமிழ் படிக்க தெரியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!


சாந்தனின் உயிரிழப்பு

அதனை தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலேயே சாந்தன் உயிரிழந்தார்.

ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் | Murugan Jayakumar Robert Bias To Sri Lanka

இந்நிலையில், திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும்.

மனு மீதான விசாரணை

எனவே தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை விவகாரம்! 7 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர் | Murugan Jayakumar Robert Bias To Sri Lanka

இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போது, முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்கவிட்டதாக தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா

மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016