முருகன், பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை வருகின்றனர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இவர்கள் மூவரும் நாளை (03) காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் நளினி உள்ளிட்ட ஆறுபேரும் உயர் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அதில் இலங்கை தமிழர்களான முருகன், ரொபர்ட் பயஸ், எஸ்.ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இலங்கைக்கு வருகை
இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மூவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |