அநுர ஆட்சியில் திட்டமிட்டு தொடர்ந்து முடக்கப்படும் முஸ்லிம் சமூகம்
ஜனாதிபதி தேர்தலையடுத்து அநுர குமார திஸாயக்க (Anura Kumara Dissaya) அமைச்சரவையில் முஸ்லிம்கள் இடம்பிடிக்காமை என்பது பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.
அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இடம்பெற்ற போதிலும் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த எவருக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என தொடர் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன.
இதையடுத்து, கருத்து தெரிவித்த அரசாங்கம் புதிய அமைச்சரவையானது, இனம், மதம் மற்றும் சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என தனது தரப்பு கருத்தை முன்வைத்திருந்தது.
இது தொடர்பில் கடுமையான வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்பட்டு வருவதாக சமூக செயற்பட்டாளர் சிராஸ் யூனுஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)