கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் உள்ளடக்கப்படாத முஸ்லிம்கள் : இம்ரான் மகரூப் ஆதங்கம்

Sajith Premadasa Imran Maharoof Eastern Province
By Sathangani Oct 15, 2024 05:53 AM GMT
Report

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்தார்.

கிண்ணியா (Kinniya) - குறிஞ்சாக்கேணியில் நேற்று (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) சமீபத்தில் அவரது பிரத்தியேக ஆளணியில் பிரத்தியேக செயலாளர், பொதுசன தொடர்பு உத்தியோகத்தர், ஊடக செயலாளர் என 3 நியமனங்களைச் செய்துள்ளார்.

7 நாட்கள் காலக்கெடு - அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில

7 நாட்கள் காலக்கெடு - அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில

பிரத்தியேக ஆளணி

இந்த நியமனங்களில் முஸ்லிம் ஒருவரும் உள்வாங்கப்படாமை எனக்கு மிகவும் கலையைத் தருகின்றது. கிழக்கு மாகாணம் 3 இனங்களும் வாழும் மாகாணம். இதில் முஸ்லிம்கள் கணிசமான தொகையினர்.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் உள்ளடக்கப்படாத முஸ்லிம்கள் : இம்ரான் மகரூப் ஆதங்கம் | Muslims Avoid In Eastern Governor Exclusive Staff

எனவே, இம்மாகாண முஸ்லிம்களது கலாசார பாரம்பரியங்கள் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் தெரிந்து கொண்டால் தான் சகலருக்கும் நீதியான சேவையை வழங்க முடியும்.

இவ்வாறான நிலையில் ஆளுநரது பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம் ஒருவர் இருந்தால் அவருக்கு முஸ்லிம்கள் தொடர்பான தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். குறைபாடுகளை தவிர்த்துக் கொள்ளக் கூடிதாக இருக்கும்.

தற்போது அந்தச் சந்தர்ப்பம் ஆளுநருக்கு இல்லாமல் உள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் நல்ல மனிதர், கல்விமான், பல்கலைக்கழக மட்டத்தில் நியாயமான முறையில் சேவை வழங்கியுள்ளார் என்றெல்லாம் நான் அறிந்துள்ளேன்.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் - அநுர அரசு நடவடிக்கை

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் - அநுர அரசு நடவடிக்கை

இனரீதியான அரசியல்

அவர் வகித்த முன்னைய பதவிகள் அனைத்தும் அலுவலகம் சார்ந்த பதவிகள் அதனால் அவரால் எவ்வித தலையீடும் இன்றி சுதந்திரமாக பணியாற்ற முடிந்தது எனினும் தற்போது அவர் வகிப்பது அரசியல் ரீதியான பதவி.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் உள்ளடக்கப்படாத முஸ்லிம்கள் : இம்ரான் மகரூப் ஆதங்கம் | Muslims Avoid In Eastern Governor Exclusive Staff

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் இங்கு இனரீதியான அரசியல் ஊறிப் போயுள்ளது. இந்நிலையில் அரசியல்வாதிகள் தங்களது கோரிக்கைகளை வெல்வதற்காக அடுத்த இனத்தை குறைகூறும் பண்பு இருப்பதை கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நான் அவதானித்துள்ளேன்.

இதனால் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு. இந்நிலையில் முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அதன் உண்மைத் தன்மையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்கு நம்பிக்கை மிகுந்த ஒருவர் அளுநரது அருகில் இருப்பது அவசியமென நான் கருதுகின்றேன். அவ்வாறான ஒருவர் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவராய் இருந்தால் கூட பரவாயில்லை.

எனவே, இந்த விடயங்களை ஆளுநர் கவனத்தில் கொள்ள வேண்டும். அவரது நியாயமான செயற்பாடுகளுக்கும், எமது கட்சியும் நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் சிறந்த மாற்றத்திற்கும் இது உறுதுணையாக இருக்கும்“ என அவர் தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா

யாழ். மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023