முத்தையன்கட்டு இளைஞன் படுகொலை : 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு (Mullaitivu) முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினருக்கும், கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (26.08.2025) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டடுள்ளது.
வழக்கு விசாரணை
கடந்த 7 ஆம் திகதியன்று முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால், 4 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகியுள்ள நிலையில் குறித்த வழக்கு 26.08.2025 ம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் தலைமையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.
உயிரிழந்த இளைஞர்
இதன்போது சட்டத்தரணி கெங்காதரன் தலைமையிலான நான்கு சட்டத்தரணிகள் அவர்கள் உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக நியாயங்களை முன்வைத்திருந்தனர்.
தொடர்ந்து இராணுவத்தினருக்கான பிணை கோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கடும் நிபந்தனைகளின் பின்னர் குறித்த நான்கு இராணுவத்தினரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு இராணுவத்தினருக்கும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 30.09.2025 அன்று திகதியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this

