அலரிமாளிகைத் தாக்குதல்! வெளிவந்த மர்ம நபர்களின் பின்னணி

Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kiruththikan May 23, 2022 06:08 AM GMT
Report

கடந்த 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது வந்த மர்ம நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகமூடிகளை அணிந்து உந்துருளிகளில் வந்த குழுவினர் அலரிமாளிகை மீது பல பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் இரவு அலரி மாளிகைக்கு மேல் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட நேரலை காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் இந்த விடயம் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள வந்த உந்துருளியின் சாரதிகள் இலக்கத் தகடு தெரியாமல் மறைத்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் காண பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அலரிமாளிகைத் தாக்குதல்! வெளிவந்த மர்ம நபர்களின் பின்னணி | Mystery Figures Who Came To Attack Allari House

அலரி மாளிகைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக இரண்டு காவல்துறை கவச வாகனங்கள், இரண்டு பேருந்துகள் உட்பட 7 காவல்துறை வாகனங்கள் சேதம் அடைந்தன.

இதேவேளை, கெக்கிராவ, இபலோகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிறைவடைந்து விட்டதனால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகைத் தாக்குதல்! வெளிவந்த மர்ம நபர்களின் பின்னணி | Mystery Figures Who Came To Attack Allari House

உந்துருளியில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் தந்தை இப்பலோகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில், பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள் உட்பட திட்டமிட்ட தீ வைப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

அநுராதபுரம் மற்றும் தெற்கில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் பல குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அலரிமாளிகைத் தாக்குதல்! வெளிவந்த மர்ம நபர்களின் பின்னணி | Mystery Figures Who Came To Attack Allari House

சிசிடிவி காட்சிகள், தொலைபேசி வலையமைப்புகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட சான்றுகள் இதை உறுதிப்படுத்துவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 9ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீட்டிற்கு வந்து அரச வாகனங்கள் இரண்டின் மீது தீ வைத்தவர்கள் வெளி மாகாணத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவந்துள்ளது.

இந்த குழுவினர் 16 உந்துருளிகள் மற்றும் வாகனம் ஒன்றில் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025