நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு

Sri Lanka India Indian rupee
By H. A. Roshan Sep 19, 2026 12:19 AM GMT
Report

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது.

2024 ஆகஸ்ட் மாதம் படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நிதியுதவியை வழங்குகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதிலும், மக்கள்-to-மக்கள் தொடர்பு திட்டதை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நீடிப்பு வெளிப்படுத்துகிறது.

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

சுமார் 300 மில்லியன்

இந்த நிதியுதவி Viability Gap Funding (VGF) எனப்படும் செயல்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு | Nagapattinam Kas Ferry Service Ind Financial Aid

பயணிகளுக்கு சேவை கட்டணத்தை மலிவாக வைத்திருப்பதுடன், படகு சேவையின் தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முக்கியமான தளவாட மற்றும் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஆண்டைப் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.

2024 ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்தப் படகு சேவை மூலம் சுமார் 52,000 பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாசார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் பசிலை நாடுகடத்தும் நடவடிக்கை! அமெரிக்காவை சென்றடைந்த இரகசிய கடிதம்

தீவிரமடையும் பசிலை நாடுகடத்தும் நடவடிக்கை! அமெரிக்காவை சென்றடைந்த இரகசிய கடிதம்

இந்தப் படகு சேவை

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை மீண்டும் வலுப்படுத்துவதில் இந்தப் படகு சேவை முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு | Nagapattinam Kas Ferry Service Ind Financial Aid

இந்தப் படகு சேவைக்கான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட கடல்சார் இணைப்பு தொடர்பான பகிரப்பட்ட நோக்கத்துடனும் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோக்கம் 2024 டிசம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போதும், 2025 ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், எதிர்காலத் திட்டங்களில், மொத்தம் 65 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெறுகின்றன.

அத்தோடு, இந்தியா – இலங்கை இடையிலான கடல்சார் இணைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும், பொருளாதார மற்றும் மக்கள்-to-மக்கள் தொடர்புகளை ஆழப்படுத்துவதற்கும் புதிய கடல் வழித்தடங்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்படவுள்ளன.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்