நல்லூர் ஆலய சூழலில் விசேட கண்காணிப்பு - ஒத்துழைப்பை கோரியுள்ள காவல்துறையினர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண பிரிவின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜரூப் தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நேற்று முதல் ஆரம்பமாகி எதிர்வரும் மாதம் வரை இடம்பெறவுள்ளது.
அந்த காலத்தில் நல்லூர் ஆலய வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையினரால் விசேடநடைமுறைகள் வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
எனவே அந்த செயற்பாட்டிற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களுடைய உடமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் வீடுகளில் நன்றாக பூட்டி தங்களுடைய வீடுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பில் காண்க.