நல்லூர் கந்தனின் சப்பற திருவிழா (நேரலை)
யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாறுகளின் ஆதாரமாக விளங்கும் பிரசித்திபெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு பண்டிகையாகவே நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.
இந்த மகோற்சவ நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கூடுவது வழக்கம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நந்தி வாகனத்தில் வீதி உலா
அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 23ஆம் நாள் இன்றாகும். காலை பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சிவப்பு பட்டாடை மற்றும் சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் நந்தி வாகனத்தில் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்கடாச்சங்களையும் வழங்கினார்.
இன்று மாலை சப்பறத்திருவிழா கோலாகலமாக இடம்பெறவுள்ள அதேவேளை நாளை தேர்த்திருவிழாவும் நாளை மறுதினம் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.