தமிழின விடுதலையை நிலை நிறுத்தி நிற்கும் தியாகி திலீபன் வரலாற்று அருங்காட்சியகம் : சி வி கே சிவஞானம் நெகிழ்ச்சி
Jaffna
ITAK
By Sumithiran
தியாகி திலீபன் வரலாற்று அருங்காட்சியகம் நான் பார்த்து நெகிழ்ந்து வாழ்ந்த தியாகி திலீபனின் தமிழின விடுதலையை நிலை நிறுத்தி நிற்கின்றது இனியும் நிற்கும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ் நல்லூரில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் அருங்காட்சியகத்துக்கு இன்று (22) சென்று திலீபனின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார் பின்பு அங்கு காணப்பட்ட குறிப்பேட்டில சிவிகே சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை திலீபனின் அருங்காட்சியகத்தை நாளாந்தம் பலர் பார்வையிடுவதுடன் திலீபனுக்கும் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






