மின்சாரக் கட்டணம் செலுத்தியது தொடர்பில் நாமல் வெளியிட்ட முக்கிய தகவல்
"சனத் நிஷாந்த தனது மின்சார கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் தொலைபேசியில் தெரிவித்ததன் பின்னரே இந்த விடயம் தமக்கு தெரியவந்ததாக" நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுவரை தனது பெயரில் மின்சாரக் கட்டணம் பெறபடவில்லை அல்லது செலுத்தபடவில்லை வும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
சனத் நிஷாந்த மின்சார சபைக்கு சென்று வினவிய போது நாமல் ராஜபக்சவின் பெயரில் மின்சாரக் கட்டணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சனத் நிஷாந்த திருமண வைபவம் தொடர்பான கட்டணத்தை செலுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்த மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இந்த கட்டணத்தை செலுத்தியதாக சனத் நிஷாந்த இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் : ஜனக ரத்நாயக்க கோரிக்கை
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க