நாமலின் அரசியல் வியூகம் : தலையசைப்பாரா முன்னாள் ஜனாதிபதி…!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்(maithripala sirisena) மகனான தஹாம் சிறிசேனவை(daham sirisena)தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa), அழைத்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமலின் இந்த அழைப்புஎதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வலுவான முறையில் மேற்கொள்வதற்கான அடித்தளம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னரும் விடுக்கப்பட்ட அழைப்பு
முந்தைய தேர்தல்களில், தஹாம் சிறிசேன பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த முன்மொழிவை ஏற்பது தொடர்பாக தஹாம் சிறிசேன எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாக அஞ்சலி
இதேவேளை, கடந்த 20 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர்வீரர்கள் அஞ்சலி நிகழ்வில் நாமலும் தஹாமும் ஒன்றாக அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிவலையை ஏற்படுத்திய தீர்ப்பு 5 நிமிடங்கள் முன்
