அரசாங்கத்தை எதிர்க்க இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்
இந்த அரசாங்கம் வளர்ச்சியை அல்ல, அடக்குமுறையையே செய்கிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, போர்வீர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் நாமல் கூறியுள்ளார்.
அடக்குமுறைக்கு எதிர்ப்பு
இந்த அரசாங்கம் போர் வீரர்களை வேட்டையாடுவதற்கும், தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து அடக்குவதற்கும் தோல்வியுற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன்படி, அனைத்து இராணுவ வீரர்கள், தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் தொழிற்சங்கங்கள் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

