தாஜுதீன் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நாமல்! அரசாங்கத்தின் அறிவுறுத்தல்
தாஜுதீன் கொலை தொடர்பாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிகம் கவலைப்படத்தேவையில்லை என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இவர்கள் ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்களுக்கான உரிமை
எவ்வாறாயினும், தாஜுதீன் கொலை, வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் குறித்து இந்த நாட்டு மக்கள் ஓரளவு விழிப்புடன் இருப்பதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொதுமக்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது சட்ட நடைமுறையாக்க நிறுவனங்கள் அனைத்தும் அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாமலின் அறிக்கைகள்
இவ்வாறானதொரு பின்னணியில், 2012 பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மர்ம மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
இது தொடர்பில் சில முக்கிய புள்ளகிள் மீது பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிற நிலையில், நாடாளுமன்ற உறுப்பனர் நாமல் ராஜபக்ச குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
