பரபரப்பாகும் அரசியல் களம் - ஜி.எல் பீரிஸை தேடி வீட்டிற்கு ஓடிய நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் (G. L. Peiris) நாரஹேன்பிட்ட இல்லத்திற்கு அண்மையில் விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜி.எல். பீரிஸின் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ச அங்கு சென்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம், சனிக்கிழமை மாலை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் குழு ஒன்று ஜி.எல். பீரிஸின் இல்லத்திற்குச் சென்றது.
தற்போதைய அரசியல் நிலைமை
அதன்போது தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாமல் ராஜபக்ச சிறப்பாக பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்பை எவ்வாறு பெறுவது மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் திட்டங்கள் குறித்தும் நாமல் ராஜபக்ஷ நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
