ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அரைக்காற்சட்டையுடன் விசாரணைக்கு வந்த நாமல்

Namal Rajapaksa Arrest
By Dharu Sep 04, 2026 12:59 PM GMT
Report

இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றங்கள் என்பது வெறுமனே ஆட்சியாளர்கள் மாறுவதல்ல. அதிகாரத்தின் மொழியும், சட்டத்தின் நடைமுறையும், அரசியல் எதிரிகளை அணுகும் விதமும் மாறுகின்றனவா என்ற கேள்வியையும் அது எழுப்புகிறது.

நாமல் ராஜபக்ச தொடர்பான இன்றைய சட்ட நடவடிக்கையும் இத்தகைய பரந்த அரசியல் விவாதத்திற்குள் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகியுள்ளது.

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ச பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோதிலும், அவர் அரசியல் ரீதியாகச் சுதந்திரமாகச் செயல்பட்டார்.

நாமலின் கைது... கோட்டா - மகிந்த கால குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்னிலையில்

நாமலின் கைது... கோட்டா - மகிந்த கால குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்னிலையில்

முற்றிலும் மாறிய அரசியல் சூழல்

விசாரணைகளில் சுதந்திரமாக நேரில் முன்னிலையாகினார். ஏன் அரைக்காற்சட்டையுடனும், தொப்பியுடனும் விசாரணையின் உயரிய சபைகளுக்கு இறுமாப்புடன் ஏறி,இறங்கினார்.

ஆனால் இன்று அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தது.

இதன் உச்சகட்டமாக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, வழக்கின் சட்டப்பூர்வ அம்சங்களைத் தாண்டி ஒரு முக்கியமான அரசியல் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

ஆட்சி மாறும்போது சட்டத்தின் அணுகுமுறையும் மாறுகிறதா?

இந்தக் கேள்விக்கு உடனடியாக அரசியல் பதிலை வழங்க முடியாது. ஏனெனில் ஒருவரை விளக்கமறியலில் வைப்பது நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ முடிவு.

அதனை அரசியல் பழிவாங்கலாகவோ அல்லது முழுமையான நீதியின் வெற்றியாகவோ அறிவிப்பதற்கு முன்னர் வழக்கின் ஆதாரங்கள், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மை ஆகியவை கவனமாக ஆராயப்பட வேண்டும்.

தீக்கிரையாவதில் இருந்து தப்பித்த மகிந்த சமரசிங்வின் வீடு

தீக்கிரையாவதில் இருந்து தப்பித்த மகிந்த சமரசிங்வின் வீடு

இலங்கையின் அதிகார அரசியல்

ஆனால் அரசியல் ரீதியாக இந்த விவகாரம் முக்கியமானது. ராஜபக்ச குடும்பம் நீண்டகாலமாக இலங்கையின் அதிகார அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக புதிய ஆட்சியின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, அது அரசியல் மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவது இயல்பானதே.

குறிப்பாக கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள்மீது விசாரணைகள் நடத்தப்பட்ட விதமும், இன்று அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளும் ஒப்பிடப்படத் தொடங்குகின்றன.

இங்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் ஒரு முக்கியமான சோதனை உள்ளது. முன்னைய ஆட்சிகளின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்ற அரசியல் வாக்குறுதி புதிய ஆட்சியின் எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தது.

எனவே, முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பான வழக்குகளில் சட்டம் தனது வேலையைச் செய்ய அனுமதிப்பது மட்டுமல்லாமல், அந்தச் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலாகத் தோன்றாத வகையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கிறது.

மறுபுறம், ராஜபக்ச தரப்பிற்கும் இதே அளவு முக்கியமான பொறுப்பு உள்ளது. “அரசியல் பழிவாங்கல்” என்ற வார்த்தையை மட்டும் முன்வைப்பது போதாது. குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியான பதிலளிப்பதும், விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதும், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதும் அவசியம்.

இந்த விவகாரத்தின் மையக் கேள்வி நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கை மட்டுமல்ல.

இலங்கையில் ஆட்சி மாறும்போது சட்டத்தின் நடைமுறை மாறுகிறதா, அல்லது ஆட்சியாளர் யார் என்ற வேறுபாடின்றி சட்டம் ஒரே அளவுகோலில் செயல்படுகிறதா? இதற்கான பதிலே புதிய அரசாங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மையை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்

ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்

சட்ட ரீதியான உண்மை

முன்னாள் ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டும் ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல. அதே சட்டத்தை தனது அரசியல் எதிரிகளுக்கும், தனது ஆதரவாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஒரே அளவில் பயன்படுத்த முடிகிறதா என்பதே உண்மையான சோதனை.

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விளக்கமறியல் நடவடிக்கை இந்தப் பெரிய அரசியல் கேள்வியை மீண்டும் இலங்கை சமூகத்தின் முன் கொண்டுவந்துள்ளது.

இது ஒரு தனிப்பட்ட வழக்காக முடிவடையுமா, அல்லது இலங்கையின் “அதிகாரத்திற்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு இன்னொரு சட்டம்” என்ற பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றும் தொடக்கமாக மாறுமா என்பதைக் காலமே தீர்மானிக்கும்.

இறுதியில், நீதிமன்றத்தின் தீர்ப்பே சட்ட ரீதியான உண்மையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் அந்தத் தீர்ப்பைச் சுற்றியுள்ள அரசியல் விவாதம் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் முன்வைக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026