கருணை காட்டுங்கள் - அமைச்சர் நாமல் ராஜபக்ச கோரிக்கை
sri lanka
protest
namal rajapaksha
By Shalini
ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் போராட்டங்களில் வெற்றிபெறுவதற்கும் தொழிற்சங்கங்களிற்கு உரிமையுள்ளது.
தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என்றால் அதனை உண்மையான தொழிற்சங்க போராட்டம் என அழைக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாணவர்களிற்கு கல்வி புகட்டுவது தேசிய போராட்டம் என தெரிவித்துள்ள அவர், ஆசிரியர்கள் அவ்வாறான பொறுப்பை கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி