தமிழ் அரசியல் கைதிகளுடன் நாமல் சந்திப்பு
visit
anuradhapura
namal
By Vanan
சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பணித்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சரும் பிரதமரின் புதல்வருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். கைதிகள் தம்மைச் சந்திக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்த நிலையிலேயே தாம் அவர்களை சந்தித்தாகவும் அவர்கள் தமது துன்பங்களை பகிர்ந்துக்கொண்டதாவும் கூறியுள்ளார்.
கைதிகள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையானவுடன், அவர்களின் மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக நாமல் ராஜபக்ஸ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.