சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு
அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியாகபூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நாமலின் வாழ்த்து
அதில், “ இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை. இளம்கலைஞர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பதுதான் இங்கு முக்கியமானது. அது நடந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று நாமல் தெரிவித்துள்ளார்.
I’m not going to comment on the politics behind this decision.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 12, 2026
What matters is that young artist Sangeethsan has been released and reunited with his family. I’m glad to see that happen.
I wish him all the best for the future and hope he continues to pursue his talent and… pic.twitter.com/WF7fLRxxgW
மேலும், இக்கலைஞர் தனது திறமையையும் அபிலாஷைகளையும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள வழியில் தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புவதாகவும், அவருக்குத் தனது வாழ்த்துகளையும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |