'பெயர்களை வெளியிட முடியாது': ஜனாதிபதி செயலகத்தின் அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட முடியாது என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடிமகன் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மூத்த உதவிச் செயலாளர் ஜி.பி.எச்.எம். குமாரசிங்க எழுத்துப்பூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.
தகவல் வழங்க மறுப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கோரிக்கையை முன்வைத்து அனுருத்த பண்டார என்பவர் மேல்முறையீடு செய்துள்ளார், ஆனால் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தகவல் கிடைக்காததால், பெயரிடப்பட்ட அதிகாரியின் சார்பாக ஜனாதிபதியின் மூத்த உதவிச் செயலாளர் பதிலளித்துள்ளார்.
இதன்படி, 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 (1) A இன் கீழ் தொடர்புடைய தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
