நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை கைக்குண்டு விவகாரம்! மேலும் ஒருவர் சிக்கினார்
கொழும்பு - நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.
குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைக்குண்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, 22 வயதுடைய இளைஞர் ஒருவரே திருகோணமலை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கடந்த 14ம் திகதி இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.