நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டம் ஒத்திவைப்பு!
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்வெளித் திட்டம், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ரொக்கெட் பெப்ரவரி 8ஆம் திகதி ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடாக, கடந்த திங்கட்கிழமை எரிபொருள் நிரப்பு சோதனை நடத்தப்பட்டது.
அந்தச் சோதனையின் போது, ரொக்கெட்டின் அடிப்பகுதியில் ஹைட்ரஜன் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதிய ஏவுதல் திகதி
இந்தக் கோளாறுகளை முழுமையாக ஆய்வு செய்து சரி செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதால், ரொக்கெட் ஏவுதல் மார்ச் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சோதனைகள் முடிந்த பிறகு, புதிய ஏவுதல் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, விண்வெளிப் பயணத்துக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்று அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு கனடிய வீரர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்கள் வாழும் சாத்தியங்கள்
1970-களுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

Image Credit: City Labs
சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தின் போது, வீரர்கள் நிலவைச் சுற்றி பயணம் செய்து, எதிர்காலத்தில் அங்கு மனிதர்கள் வாழும் சாத்தியங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 11 மணி நேரம் முன்