நாசாவின் பார்க்கர் விண்கலம் படைத்த வரலாற்று சாதனை
நாசாவின் பார்க்கர் விண்கலமானது (Nasa's Parker) சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் அருகில் சென்று இந்த சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலமானது, லாக்ஹீட் மார்ட்டின் ஜெட் போர் விமானத்தின் உச்ச வேகத்தை விட சுமார் 300 மடங்கு வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கர் விண்கலம்
பார்க்கர் சோலார் விண்கலமானது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் உள்ள கொப்பளிப்பு வெப்பத்தை கடந்து பறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
HAPPENING RIGHT NOW: NASA’s Parker Solar Probe is making its closest-ever approach to the Sun! 🛰️ ☀️
— NASA Sun & Space (@NASASun) December 24, 2024
More on this historic moment from @NASAScienceAA Nicola Fox 👇
Follow Parker’s journey: https://t.co/MtDPCEK6w6#3point8 pic.twitter.com/Bq85XFa1QS
வெள்ளி கோளில் உள்ள புவியீர்ப்பு விசைகளின் உதவின் மூலம் குறித்த வின்கலம் இந்த சாதனையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரியன் தொடர்பில் அறிய, குறிப்பாக, 1,800 டிகிரி ஃபாரன்ஹீட் (980 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையிலும் தரவுகளை விண்கலம் சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |