விண்வெளியில் உருளைக்கிழங்கு: வைரலாகும் நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்
அமெரிக்காவின்(USA) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா(NASA) தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் தற்போது வெளியிட்டுள்ள படமொன்று வைரலாகியுள்ளது.
ஊதா நிற அரோரா செவ்வாய் கிரகத்தை கைப்பற்றுவது முதல் சந்திரன், சிறுகோள்கள் உள்ளிட்ட பலவற்றின் உண்மையான தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் விண்வெளி தொடர்பான சுவாரஸ்மான தகவல்களை அடிக்கடி பகிர்ந்து வரும் நாசா தற்போது ’விண்வெளி உருளைக்கிழங்கு’ என்ற படத்தை பகிர்ந்துள்ளது.
நாசாவின் புகைப்படம்
பூமிக்கு துணை கிரகமாக நிலவு இருப்பதைப் போல, செவ்வாய்க்கிரகத்திற்கு இரண்டு நிலவுகள் இருக்கின்றன.
அதில் பெரியதான ஃபோபோஸ் செவ்வாய் கிரகத்துடன் மோதும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நூறு ஆண்டுக்கும் ஆறு அடி தூரம் என்ற வகையில், செவ்வாய் கிரகத்தை நெருங்கி வரும் இந்த ஃபோபோஸ், 50 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதிவிடும். அல்லது வளையமாக உடைந்துவிடும்.
இந்த நிலையில், அந்த ஃபோபோஸ் கிரகத்தின் புகைப்படத்தை ‘விண்வெளி உருளைக்கிழங்கு’ என்ற பெயரில் நாசா வெளியிட்டுள்ளது.
இந்த படம் 2006ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும், மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுத்திறன் இமேஜிங் அறிவ்யல் பரிசோதனை (HiRISE) மூலம் எடுக்கப்பட்டது என்றும் நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |