அரியநேத்திரனை விமர்சிப்பதற்கு சரவணபவன் அருகதையற்றவர் : நடராசா காட்டம்

Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran Oct 22, 2024 10:36 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மாநகர முதல்வரும்  மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான  தி.சரவணபவன் (T. Saravanabhavan), எமது கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் அரியநேத்திரனைப் (P. Ariyanethiran) பற்றி விமர்சிப்பதற்கு அருகதையற்றவர் என  இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மார்க்கண்டு நடராசா (M. Nadarajah) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் சென்று வருகின்ற இடங்களில் எல்லாம் கணிசமான மக்கள் நிச்சயமாக தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதாக எனக்கு உறுதி தந்திருக்கின்றார்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சங்கு சின்னத்திற்காக நாங்கள் செயற்பட்டோம் ஏனெனில் தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக தமிழர்களை ஒன்றாக அமைத்து தமிழினத்தின் விடுதலைக்காக தமிழினம் ஒத்தி இயங்குவதற்காகவும் நாங்கள் சங்கு சின்னத்தை ஆதரித்திருந்தோம் அது சிங்கள தேசியத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான ஒரு தேர்தலாகும்.

நாமல் - சுமந்திரன் இணைந்த தந்திரம் ! அநுரவிற்கு திடீர் தலையிடி

நாமல் - சுமந்திரன் இணைந்த தந்திரம் ! அநுரவிற்கு திடீர் தலையிடி

சிங்கள தேசியவாதிகள் 

இந்த நாட்டிலேயே கடந்த காலங்களாக இந்த சிங்கள தேசியவாதிகள் எமது தமிழர்களுக்கு செய்த இன்னல்கள், தடைகள் மற்றும் இடைஞ்சல்களை நாங்கள் இந்த சமூகத்தின் பால் ஒருமித்து கேட்பதற்கான ஒரு வழியை தேடித்தான் நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் சங்கை ஆதரித்தோம்.

நான் இன்றும் தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினர், எனது கட்சியில் கடந்த காலங்களில் குழப்ப நிலைகள் ஏற்பட்டன, அதற்காக வேண்டி மக்கள் மத்தியில் நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம் நமது கட்சியின்பால் உள்வீட்டு பிரச்சினைகள் அதிக அளவு இருக்கின்றன.

அரியநேத்திரனை விமர்சிப்பதற்கு சரவணபவன் அருகதையற்றவர் : நடராசா காட்டம் | Natarasa Criticized Saravanabhavan

இருந்தாலும் அதனை விடுத்து நாங்கள், எமது சின்னம் வீடு அதற்கான வாக்குகளை வழங்குங்கள் என்ற அடிப்படையில் மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் அளித்து பிரசாரம் செய்து வருகின்றோம்.

ஊழலற்ற நேர்மையான புத்திஜீவிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என மக்கள் கூறுகின்றார்கள் அது வரவேற்கத்தக்க விடயம், எமது மக்களின் பிரச்சினைகளை உணர்ந்தவர்கள் அறிந்தவர்கள் வலிகளை சுமந்தவர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய

காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய

மக்களுக்காக சேவை 

எமது வலிகளையும் பிரச்சனைகளையும் அறியாதவர்களை அனுப்புவதால்தான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன இம்முறை நடைபெற இருக்கின்ற தேர்தலில் எனது கட்சியில் எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் எட்டு வேட்பாளர்களும் வெற்றி பெறக்கூடிய சாத்தியமில்லை இருந்தாலும் அதில் மூன்று அங்கத்தவர்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

அதன் அடிப்படையில் மக்கள் எட்டு பேரில் ஒப்பீடு செய்து கடந்த கால நடவடிக்கைகள் நிகழ்கால நடவடிக்கைகளையும் அவதானித்து மூன்று பேருக்கு மக்கள் வாக்களிக்கலாம்.

அரியநேத்திரனை விமர்சிப்பதற்கு சரவணபவன் அருகதையற்றவர் : நடராசா காட்டம் | Natarasa Criticized Saravanabhavan

மக்களுக்காக சேவை செய்கின்றவர்களாகவும் தடம் மாறாத தமிழ் தேசியத்தை விட்டுப் போகாத, மாற்று கட்சிகளுக்கு சோரம் போகாத, உண்மையிலேயே மானமுள்ள தமிழர்களை தெரிவு செய்ய வேண்டும்.

தி.சரவணபவன், எமது கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் அரியநேத்திரனைப் பற்றி விமர்சிப்பதற்கு அருகதையற்றவர் அவர் கடந்து வந்த பாதைகளை விளங்கிக் கொண்டிருந்தால் இவ்வாறான கதைகளை பரப்பமாட்டார், அரியநேத்திரன் தேசியத்தின்பால் தடம் மாறாமல் மக்களோடு மக்களாக நின்று தமிழுக்காக தன்னை முற்றாக அற்பணித்து செயல்படுகின்ற ஒரு செயல் வீரன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை

வேட்பாளர் பட்டியல்

அவ்வாறானவரை விமர்சிப்பதன் காரணமாக சில வேளை தமிழரசு கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள்கூட சிதறடிக்கப்படலாம் இவ்வாறானவர்கள் கூறுகின்ற பேச்சினால் தான் தமிழரசு கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்கில் வீழ்ச்சி ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தெரிவு பிழையான முறையில்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது ஏனெனில் நானும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தேன்.

அரியநேத்திரனை விமர்சிப்பதற்கு சரவணபவன் அருகதையற்றவர் : நடராசா காட்டம் | Natarasa Criticized Saravanabhavan

எனது பெயரைக்கூட வேட்பாளர் பட்டியலில் உள்வாங்காமல் விட்டுள்ளார்கள் அதற்குரிய காரணத்தை இயன்றவரையில் எனக்கு எனது கட்சியினால் அறிவிக்கப்படவில்லை அத்தோடு மக்கள் என்னிடம் ஏன் நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவில்லை என கேட்கின்றார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நபர்களைத் தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவிக் குழுவில் வேட்பாளரை தெரிவு செய்வதற்கு வேட்பாளரே அக்குழுவில் நீதிபதியாக இருந்துள்ளார் இது ஒரு ஜனநாயகமான முறையா? வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இன்னும் ஒரு வேட்பாளர் தெரிவிக் குழுவில் இருக்கின்றார் என்றால் அது சரியான முறையில் தெரிவு நடைபெற்று இருக்காது அதன் அடிப்படையில்தான் இந்த தெரிவுக்குழு கூட முறையாக இடம்பெறவில்லை என கூறுகின்றேன்.

ஹிஸ்புல்லா தலைவரின் இரகசிய பதுங்குகுழியில் கொட்டிக்கிடந்த தங்கம் மற்றும் பணம்

ஹிஸ்புல்லா தலைவரின் இரகசிய பதுங்குகுழியில் கொட்டிக்கிடந்த தங்கம் மற்றும் பணம்

தமிழ் தேசியம்

தற்போது பெண் ஒருவர் வேட்பாளராக தேர்வு போட்டியிடுகின்றார் அவரை எனக்கு யார் என்று கூட தெரியாது இவ்வாறானவர்களை என்ன விதத்தில் தெரிவு செய்தார்கள் என்பதை எனக்குத் தெரியாது எனவே கட்சி முக்கியமா வெற்றி முக்கியமா என்று குறிப்பிட்டு கூற முடியாது இருக்கின்றது.

ஆகவே போட்டியிடுகின்ற எட்டு பேரும் தமிழ் தேசியத்தின்பால் செல்கின்றார்களா என்பதை அவர்கள் மனச்சாட்சி தொட்டு சொல்ல வேண்டும் எனவே அவர்களின் தரமானவர்களை மக்கள் மூன்று பேரை தெரிவு செய்ய வேண்டும் அது மக்களுக்கு நன்கு தெரியும்.

அரியநேத்திரனை விமர்சிப்பதற்கு சரவணபவன் அருகதையற்றவர் : நடராசா காட்டம் | Natarasa Criticized Saravanabhavan

எனவே மக்கள் அதனை தீர்மானிப்பார்கள் நாம் எதிர்பார்க்கின்றோம் நாடாளுமன்றம் செல்பவர்கள் சிறந்த தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடியவராகவும், புத்தி ஜீவியாகவும், இருக்க வேண்டும் என்பதையும், மக்களுக்கு சேவை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கையான தமிழ் தேசியம் என்பதை விற்று விடாமல், நேரடியாக தேசியத்தின் பால் நின்று செயல்படக்கூடிய செயல்வீரர்களைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து,கனடாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்த பொதிகள் :அதிகாரிகள் அதிர்ச்சி

இங்கிலாந்து,கனடாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்த பொதிகள் :அதிகாரிகள் அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023