தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
National People's Power - NPP
By Harrish
தேசிய மக்கள் சக்தியின்(NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே(Rathna Gamage)தெரிவித்துள்ளார்.
அக்மீமமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் பெற்றுக்கொண்டு சேவையாற்றுவதில்லை.
பிரதிநிதிகளின் சம்பளம்
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பொதுநிதியில் வைப்பிலிடப்படும்.
இதன்போது, சேவையாற்றும் 159 பேரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
பொதுமக்களுக்கு சுமையாகாத வகையில் சேவையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி