யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக தேசிய தரப்படுத்தல் மட்டத்திலான ரெனிஸ் போட்டி!
பாடசாலை மாணவர்களுக்கிடையே 14 வயதிற்கும் 18 வயதிற்கும் கீழ்ப்பட்ட ஆண்/பெண் தனிநபர் பங்குபற்றும் தேசிய தரப்படுத்தல் மட்டத்திலான ரெனிஸ் போட்டி முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியானது எதிர்வரும் 28, 29, 30 ஆம் திகதிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி பரியோவான் கல்லூரி ரெனிஸ் திடல்களில் நடைபெறவுள்ளது.
கொழும்பு. குருநாகல், மட்டக்களப்பு, கிளிநொச்சி போன்ற பல மாவட்டங்களிலுமிருந்து வருகை தரும் மாணவர்களுடன் யாழ்ப்பாணத்தில் பல பாடசாலை மாணவர்கள் சேர்ந்து விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரெனிஸ் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு
கொழும்பு சென்று போட்டிகளில் கலந்து கொள்ள முடியால் ஏக்கத்துடன் வடமாகாண பல ரெனிஸ் வீரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்த அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் ரெனிஸ் விளையாட்டு மேலும் வளர்ச்சியடைவதற்கு பக்கபலமாக இருக்கும்.
