சுதந்திரதின விழாவில் தமிழ் மொழியிலும் பாடப்பட்ட தேசிய கீதம்!
Sri Lankan Tamils
Galle
Ranil Wickremesinghe
National Day
Tamil
By Shadhu Shanker
காலிமுகத் திடலில் இன்று (04) இடம்பெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ் மொழியில் தேசிய கீதம்
இராணுவ அணிவகுப்புக்குப் பின்னரான வழமையான கலாசார அணிவகுப்பு இம்முறை இடம்பெறாததுடன், இலங்கையின் சகல கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சுதந்திர விழாவில் குறுகிய கலாசார அணிவகுப்பு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
தமிழர் தாயகப்பகுதிகள் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனபடுத்தியுள்ள நிலையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்